சமீபத்தில், பல்வேறு பழைய படங்கள் மீண்டும் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன. அந்த வரிசையில், எஸ்.ஜே. சூர்யா இயக்கிய விஜய்யின் ‘குஷி’ செப்டம்பர் 25-ம் தேதி மீண்டும் வெளியாகிறது.
‘கில்லி’ படத்தை வெளியிட்ட சக்தி பிலிம் ஃபேக்டரி இதை வெளியிடும். இதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. ‘குஷி’ படம் மே 19, 2000 அன்று வெளியிடப்பட்டது. ஏ.எம். ரத்னம் தயாரித்த இந்தப் படத்தை எஸ்.ஜே. சூர்யா இயக்கியுள்ளார்.

இதில் விஜய், ஜோதிகா, மும்தாஜ், விவேக், விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு இசையமைப்பாளராக தேவா பணியாற்றினார். படத்தின் பாடல்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன.
‘குஷி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அது இந்தி மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.