சென்னை: சினிமாவிற்கு மொழி முக்கியம் இல்லை என்று மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தெரிவித்தார்.
சென்னையில் மலையாள நடிகர் டொவினா தாமஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் சின்ன வயதில் இருந்து தமிழ் படங்கள் நிறைய பார்ப்பேன். 10-வது படிக்கும்போது நிறைய தெலுங்கு படங்கள் பார்ப்பேன். டிடி1, டிடி2-வில் இந்தி படங்கள் பார்ப்பேன்.
கேரளாவில் எந்த மொழியாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் பார்ப்போம். அந்த கலாச்சாரம் உள்ளது. சினிமாவிற்கு விஷூவல் லாங்குவேஜ் தான். லாங்குவேஜ் பேரியர் இல்லை.
கொரோனாவிற்கு பிறகு எல்லா இண்டஸ்ட்ரிஸ் இடையில் இருந்த இடைவெளி குறைந்துள்ளது. இப்போ அந்த மாதிரியான இடைவெளியே இல்லை.
எந்த மொழியில் படம் ரிலீஸ் ஆனாலும் டப் செய்து எல்லா மொழிகளிலும் வருகிறது. எல்லாரும் என்ஜாய் பண்ண முடிகிறது. இதெல்லாம் சந்தோஷம் தான்.
கோலிவுட், ஹாலிவுட், டாலிவுட், சான்டல்வுட் அப்படி எல்லாம் இருந்தது இப்போ இந்தியன் சினிமான்னு சொல்கிற அளவிற்கு அந்த இடைவெளி குறைந்திருப்பதாக நினைக்கிறேன் என்று கூறினார்.