தமிழ் சினிமாவில் ‘ரன்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மீரா ஜாஸ்மின், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ஒலித்த அழகுக் குரலாகவும், நாயகியாகவும் பெயர் பெற்றவர். அவரது நடிப்பில் வெளிவந்த ‘புதிய கீதை’, ‘ஆஞ்சநேயா’, ‘ஆயுத எழுத்து’, ‘பரட்டை என்ற அழகுசுந்தரம்’, ‘மெர்குரிப் பூக்கள்’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ‘சண்டைக்கோழி’ படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த அவர், அந்தப் படத்தில் காட்டிய க்யூட்டான நடிப்பு மற்றும் உரிமையான பேச்சு இன்னும் ரசிகர்களின் நினைவில் உள்ளது.

மலையாள சினிமாவிலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ரவி தேஜாவுடன் நடித்த ‘பத்ரா’ திரைப்படம் தெலுங்கில் மெகா ஹிட்டாகியது. அதற்கிடையே 2003ம் ஆண்டு ‘Paadam Onnu: Oru Vilapam’ என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். 2014-ஆம் ஆண்டு ஒரு துபாய் இன்ஜினியரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகிய அவரின் வாழ்க்கை, இரண்டே ஆண்டுகளில் விவாகரத்துடன் முடிவடைந்தது. இந்தக் காலப்பகுதியில் உடல் எடை கூடியும், நடிப்பில் தொலைந்துவிட்டதாகவும் பேசப்பட்டது.
அனாலும் மீரா ஜாஸ்மின் மீண்டும் களத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். ‘Makal’ எனும் மலையாள படத்தில் ஜெயராமுடன் இணைந்து நடித்து தனது மாற்றத்தை நிரூபித்தார். உடற்பயிற்சியில் முழுமையாக கவனம் செலுத்தி எடையை குறைத்து மீண்டும் தனது அழகையும், பார்வையாளர்களின் கவனத்தையும் பிடித்தார். சமீபத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் நடித்த ‘டெஸ்ட்’ படத்தில் சித்தார்த்தின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. நீல நிற உடையில், தலைமுழுவதும் மல்லிப்பூவும் நெற்றியில் குங்குமத்துடனும் அழகாக தோன்றும் அவர், 43 வயதிலும் இளமை குறையாமல் இருப்பதால் ரசிகர்கள் அதற்கேற்பக் கவிதை பாடி லைக்குகள் குவிக்கிறார்கள். மீராவின் இந்த அதிரடி ரீ என்ட்ரி மற்றும் அழகு பராமரிப்பு இளைஞர்களுக்கும் பெரும் ஊக்கமளிக்கின்றது.