தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் தொடர்ச்சியான வெற்றிப் படங்களை கொடுத்து கவனம் பெற்ற இயக்குனர் சிறுத்தை சிவா, தற்போது ஒரு பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறார். ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த மற்றும் சூர்யா நடித்த கங்குவா ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய நிலையில், அவருக்கு தற்போது எந்த புதிய வாய்ப்பும் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், சிறுத்தை சிவா சென்னை மாநகரில் வைத்திருந்த தனது அலுவலகத்தை காலி செய்துவிட்டதாகவும், கோலிவுட்டை விட்டு விலக திட்டமிட்டுள்ளார் என்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
‘சிறுத்தை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், வீரம், வேதாளம், விசுவாசம் உள்ளிட்ட படங்களை இயக்கி பெரிய வெற்றிகளை பதிவு செய்தார். விவேகம் படத்தின் வரவேற்பு மிக சிறப்பாக இல்லாதபோதிலும், அது ஒரு குறிப்பிட்ட அளவில் வசூலை பெற்றது. ஆனால் அண்ணாத்த மற்றும் கங்குவா போன்ற பெரிய நட்சத்திரங்களை கொண்டிருந்த படங்கள் தோல்வியடைந்ததற்குப் பிறகு, முன்னணி நடிகர்கள் அவரிடம் கதை கேட்கும் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், பல ஆண்டுகளாக சென்னையில் வைத்திருந்த தனது அலுவலகத்தை மூடிவிட்டு, தெலுங்கு அல்லது கன்னட திரைப்படத் துறையில் வாய்ப்புகள் தேட சிறுத்தை சிவா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.