மும்பை: வருண் தவானின் ‘பேபி ஜான்’ திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அப்படத்தின் விளம்பரப் பணிகளில் அவர் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “அமித் ஷாவை பார்க்கும் போது, எனக்கு ‘அனுமான்’ போல் தோன்றுகிறது. ஏனென்றால் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போது பேசிய அமித் ஷா, அனைத்து கேள்விகளிலும் இந்தியாவையும், பிரதமர் மோடியையும் முன்னிறுத்தினார்.
அமித்ஷா எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளவில்லை. அவருக்கு இந்தியாதான் எல்லாமே. அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அவர் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார், ஆனால் பொதுவெளியில் தனக்கென ஒரு பிம்பத்தை உருவாக்க நினைக்கவில்லை. நாடு முக்கியம் என்று அவர் கூறுகிறார். அவரது கருத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.
சிலர் வருண் தவனை ‘சங்கி’ என்றும் விமர்சித்தனர். இந்நிலையில் அவரிடம் இந்த விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த வருண், “விமர்சகர்கள் விமர்சிக்கட்டும். நான் அரசியல்வாதி அல்ல. எனக்குப் பிடிக்காத ஒன்றைக் கேட்டால் அதை எதிர்த்துப் பேசுவேன். நான் போற்றும் சிலரின் குணங்களை முன்னிலைப்படுத்துகிறேன். அவ்வளவுதான் எனத் தெரிவித்துள்ளார்.”