அனிருத்தின் பின்னணி இசை, பாடல்கள் என பல்வேறு இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக அனிருத் திகழ்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இப்போதும் அவரது பாடல் மற்றும் பின்னணி இசைக்காக பல்வேறு படங்கள் காத்திருக்கின்றன. அனிருத் இசையில் தற்போது தமிழில் ரஜினியின் ‘கூலி’, கமலின் ‘இந்தியன் 3’, விஜய்யின் ‘விஜய் 69’, அஜித்தின் ‘விடாமுயற்சி’, சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 23’, விக்னேஷ் சிவனின் ‘லைப் இன்சூரன்ஸ் கார்போரேஷன்’, கவின் ‘கிஸ்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.
இவை தவிர ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படமும் உள்ளது. மற்ற மொழிகளில் ஹிந்தியில் ஷாருக்கானின் ‘கிங்’ மற்றும் அட்லீ இயக்கிய சல்மான் கான் படமும் அடங்கும். விஜய் தேவரகொண்டாவின் ‘விடி 12’, கௌதமின் ‘மேஜிக்’, நானியின் ‘நானி ஓடிலா 2’ ஆகிய படங்கள் தெலுங்குப் படங்கள்.
ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். அடுத்த 10 மாதங்களில் 50 பாடல்களை உருவாக்க உள்ளதாக அனிருத் சமீபத்திய பேட்டியில் கூறியது நினைவிருக்கலாம். இன்னும் சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எப்படியாவது அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய காத்திருக்கின்றனர்.
இப்போது தான் ஒப்பந்தம் செய்த படங்களுக்கு அனிருத் 15 கோடிக்கு மேல் கேட்பதாக கூறப்படுகிறது. அதற்கு படக்குழுவினர் பலரும் ஓ.கே சொல்லி வருவது பெரும் ஆச்சரியம்.