தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறிய லோகேஷ் கனகராஜ், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கி வருகிறார். 2017ம் ஆண்டு “மாநகரம்” என்ற திரைப்படத்துடன் இயக்குனராக அறிமுகமான லோகேஷ், தமிழ் சினிமாவில் மிகுந்த புகழைப் பெற்றார்.
அடுத்ததாக, கார்த்தியை வைத்து “கைதி” என்ற திரைப்படத்தை இயக்கிய அவர், கார்த்தி நடிப்பின் மூலம் மெகா ஹிட் படமாக மாற்றினார். “கைதி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் வாய்ப்பு தற்போது பேசப்படுகிறது.
மேலும், தளபதி விஜய்யின் “மாஸ்டர்”, உலகநாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்”, மற்றும் தளபதி விஜய்யின் “லியோ” ஆகிய படங்களின் வெற்றியுடன் தமிழ் சினிமாவில் ஒரு ஹாட்ரிக் வெற்றியை அடைந்துள்ளார். தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “கூலி” என்ற திரைப்படத்தில் இயக்குநராக உள்ளார்.
இந்த நிலையில், பாலிவுட் உலகில் களமிறங்க உள்ளதாகவும், Mythri Movies Makers நிறுவனத்துடன் ஒரு பான் இந்தியன் திரைப்படத்திற்கான கதையை பிரபல நடிகர் அமீர் கான் உடன் விவாதித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த புதிய முயற்சிகள், லோகேஷ் கனகராஜின் இயக்குநர் கலைக்கும் புதிய அடையாளங்களை வழங்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.