சென்னை: லோகேஷ் கனகராஜின் ‘எல்சியூ’ படத்தைத் தொடர்ந்து ‘பென்ஸ்’ படமும் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படத்தின் மூலம் ‘எல்சியூ’ படங்களின் வரிசை உருவானது.
இதில் படத்தின் கதையின் தொடர்ச்சி, கதாபாத்திரங்களை ஒன்றிணைப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன. இதில் இதுவரை ‘கைதி’, ‘விக்ரம்’ மற்றும் ‘லியோ’ போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன.
இவற்றைத் தொடர்ந்து ‘பென்ஸ்’ படமும் இதில் இடம்பெறவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இதை தயாரிக்க மட்டுமே செய்கிறார். லாரன்ஸ் நடிக்கும் இந்தப் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.
லோகேஷ் கனகராஜுடன் இணைந்து சுதன் மற்றும் ஜெகதீஷ் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் எல்சியூ படக்குழுவில் லாரன்ஸும் இணையவுள்ளார்.
இதுவரை கமல், விஜய், சூர்யா, கார்த்தி, அர்ஜுன் தாஸ் போன்றவர்கள் எல்சியூ கேரக்டர்கள். ‘கூலி’ படத்தை முடித்துவிட்டு கார்த்தி நடிக்கும் ‘கைதி 2’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
எல்சியூ படங்களில் கடைசியாக ‘விக்ரம் 2’ இருக்க வேண்டும் என்று லோகேஷ் கனகராஜ் முடிவு செய்தார்.