
தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய “கூலி” படத்துக்காக ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படம் ரூ.1000 கோடி வசூலை நோக்கி செல்லும் எனும் நம்பிக்கை நிலவுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவுள்ளதுடன், டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (ஆ.2) நடைபெறுகிறது. விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் உள்ள உள் அரங்கில் நடைபெறுகிறது. டிரைலர் இரவு 7 மணிக்கு வெளியிடப்படுகிறது.

லோகேஷ், லியோ படப்பிடிப்பு முடிந்ததும் ரஜினிக்கு கூலி கதையை சொன்னதாக தெரிவித்துள்ளார். அனிருத் மூலமாக கதையை சொன்னதும், பல கட்டமாக விவரித்த பிறகே ரஜினி ஒப்புதல் அளித்ததாக கூறினார். மேலும், “விக்ரம்” படத்தை ஒரு ஃபேன் பாயாக எடுத்தாலும், பொது மக்களும் அதை ரசிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் படம் உருவாக்கியதாகவும் கூறினார். பெரிய நடிகர்களுக்கே ஏற்படுத்தும் திருப்தியை விட, மக்கள் முழுமையாக ரசிக்கும் படமாக இருக்கவேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்தார்.
“பெரிய நடிகர்களுக்கு எப்போதும் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள். ஆனால் பொதுமக்கள் படம் நன்றாக இருந்தால்தான் வருவார்கள்,” என்ற கருத்தும் அவரது பேட்டியில் இடம்பெற்றது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கூறிய இந்த உண்மை பலரை ஈர்த்துள்ளது. பலரும், மாஸ் ஹீரோக்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும், வெற்றிக்கு பொதுமக்கள் முக்கியம் என தெரிவித்துள்ளனர்.