தமிழ் சினிமாவில் வேகமாக உயர்ந்து வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது சறுக்கலில் சிக்கியுள்ளார் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. மாநகரன் படத்திலிருந்து துவங்கி, கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிகளைப் பெற்றார். குறிப்பாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தால் தொழில்துறையில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், “பரமபத பாம்பு கொத்தியது போல, ஏறிய வேகத்தில் கீழே விழுந்துவிட்டார்” என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ரஜினி – கமல் இணையும் அடுத்த படத்தையும் லோகேஷ் இயக்குவார் என வதந்திகள் இருந்தாலும், ரஜினிகாந்த் இன்னும் உறுதி செய்யவில்லை என்பதும் லோகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது. இதனால், அவரின் அடுத்த பட வாய்ப்புகள் கேள்விக்குறியாகி விட்டன.
எனினும், லோகேஷ் கனகராஜை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தன்னுடைய கடுமையான உழைப்பாலும் புதிய முயற்சிகளாலும் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுவாரா என்பது ரசிகர்களின் ஆவலான எதிர்பார்ப்பாக உள்ளது.