சென்னை: அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அலங்கு’. இதனை ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்குகிறார். செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜினா ரோஸ், சண்முகம் முத்துசாமி ஆகியோருடன் ஒரு நாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறது.
எஸ்.பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், அஜீஷ் இசையமைத்துள்ளார். வரும் 27-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலரை ரஜினிகாந்த் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழகம் மற்றும் கேரள எல்லையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, புலம்பெயர்ந்தோராக பணிபுரியும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
நாய்கள் மீதான பாசத்தை மையமாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே உள்ள பாசமும் உறவும் எப்படி பெரிய பகையாக மாறுகிறது என்பதை ஒரு சம்பவத்தின் மூலம் சொல்கிறது படம். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் உருக்கமாக பேசினார். அவர் கூறியதாவது:-
சமீபத்தில் வெளியான ஒரு பிரமாண்ட படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. படம் சரியில்லை என்றால் ரசிகர்களுக்கு கடும் கோபம் வரும். அது அவர்களின் உரிமை என்றாலும், இரக்கத்துடனும், அன்புடனும் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும். இதைச் சொல்வதற்கு நான் பயப்படவில்லை. ‘கங்குவா’ படத்தை நான் பார்க்கவில்லை. சூர்யா போன்ற நல்ல நடிகரை பார்த்துக்கொள்ள வேண்டும்.