சென்னை: விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கியபின்பும் பிளடி பெக்கர் திரைப்படம் நெல்சனின் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபகரமான படமாகவே அமைந்து இருக்கிறது.
இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் கதாநாயகனாக நடித்திருந்த ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது.
இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.
ப்ளடி பெக்கர் படத்தை வாங்கிய தமிழக விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். இதனால் ப்ளடி பெக்கர் திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பாளர் நெல்சன் நஷ்ட ஈடு வழங்கியுள்ளார்.
விநியோகத்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கியபின்பும் பிளடி பெக்கர் திரைப்படம் நெல்சனின் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபகரமான படமாகவே அமைந்து இருக்கிறது.
இப்படத்திற்கான தயாரிப்பு செலவு அதன் ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமை மூலம் நெல்சனுக்கு கிடைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.