‘இறுகப்பற்று’ படத்திற்குப் பிறகு, விக்ரம் பிரபு நடித்த ‘ரெய்டு’ படம் வெளியானது. அந்தப் படம் சரியாக ஓடவில்லை. அதைத் தொடர்ந்து, விக்ரம் பிரபு தனது அடுத்த படத்தின் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளார். அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபுவுடன் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜா ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் சத்யராஜ் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவாளராகவும், சீன் ரோல்டன் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இதன் போஸ்டர் மற்றும் வெளியிடப்பட்ட பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. திருமணம் தாமதமாகி வருவதால், இந்த சமூகத்தில் ஹீரோ எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றியது இந்தப் படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் ஃபேக்டரி பெற்றுள்ளது.