சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் இரண்டு நாட்களில் 50 கோடி வசூல் செய்ததாக அறிவித்த படக்குழு, இன்று அதிகாரப்பூர்வமாக படம் 100 கோடி வசூலை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், சிவகார்த்திகேயன் தனது கேரியரில் நான்காவது முறையாக 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார்.

முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், பிஜு மேனன், வித்யூத் ஜமால் மற்றும் ஷபீர் கல்லரக்கல் நடித்த இந்த கமர்ஷியல் ஆக்ஷன் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், ரசிகர்களின் ஆதரவால் வசூலில் நல்ல முன்னேற்றம் கண்டது. முதல் வார இறுதிக்குப் பிறகு வசூல் குறைந்தபோதும், தொடர்ந்து தினசரி கோடிகளை சேர்த்து 100 கோடி சாதனையை எட்டியுள்ளது.
முன்னதாக டாக்டர், டான், அமரன் படங்களின் மூலம் 100 கோடி மற்றும் அதற்கு மேல் வசூல் சாதனையை எட்டியிருந்த சிவகார்த்திகேயன், தற்போது மதராஸி மூலம் மீண்டும் தனது வர்த்தக வெற்றியை நிரூபித்துள்ளார். குறிப்பாக அமரன் படத்தின் 300 கோடி வெற்றிக்குப் பிறகு, மதராஸி படம் இவரது “மினிமம் 100 கோடி ஹீரோ” என்ற பெயரை உறுதிப்படுத்தியுள்ளது.
வரும் பொங்கலுக்கு வெளியாகும் பராசக்தி படத்தின் மூலமாக, சிவகார்த்திகேயன் தனது 5வது 100 கோடி சாதனையை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழ் சினிமாவில் வணிகரீதியாக நம்பிக்கை தரக்கூடிய ஹீரோவாக அவர் திகழ்கிறார்.