சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால் மற்றும் பலர் நடித்த மதராஸி திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 அன்று வெளியானது. 6 நாட்களில் உலகளவில் குறைந்த வசூலை மட்டுமே ஈட்டியதால் ரசிகர்களை சற்று கவலைப்படுத்தியுள்ளது.

முதல் வாரத்தில் படம் பார்வையாளர்களின் ஆர்வத்தை பெற்றிருந்தாலும், அடுத்த வாரங்களில் அது தொடரவில்லை. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ படத்திற்காக மக்கள் தியேட்டர்களுக்கு சென்றதைப் போலவே, மதராஸி படத்திற்கும் அதே ஆர்வம் தொடர்ந்ததில்லை. ஆனால் விமர்சனங்கள் பாசிட்டிவ் மற்றும் கலவையானவை மட்டுமே, நெகட்டிவிட்டி அதிகமாக எழவில்லை.
6வது நாளில் இந்திய அளவில் மதராஸி திரைப்படம் வெறும் 2.25 கோடி வசூல் செய்தது. இதுவரை 6 நாட்களில் இந்தியாவில் ஒட்டுமொத்த வசூல் 46.75 கோடி ரூபாய் மட்டுமே. உலகளவில் படம் 76 கோடி வரை வசூல் செய்துள்ளது. தயாரிப்பாளர் நிறுவனம் ஆரம்பத்தில் 50 கோடி வசூலை அறிவித்திருந்தாலும், பின்னர் சத்தமின்றி பிரமோஷன்களை மட்டும் வெளியிட்டு வருகிறது.
100 கோடி வசூல் சாத்தியமா? என கேட்டால், இந்த வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 20 கோடி வசூல் கூடுதலாக ஈட்டினால் மட்டுமே 100 கோடி கிளப்பில் சேரலாம். எதிர்பார்ப்பில் அதிகபட்சம் 85 கோடி வசூல் வரை மட்டுமே கிடைக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றனர்.