சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று (செப்டம்பர் 5) வெளியான மதராஸி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்த படம், அவர் தர்பார் மற்றும் சிகிந்தர் படங்களில் பெற்ற தோல்விக்கு பிறகு ஒரு மாஸ் கம்பேக் என ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
படத்தின் கதை, திரைக்கதை ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. சிலர் முதல் பாதியைப் பற்றி கலவையான கருத்துக்களை தெரிவித்தாலும், மொத்தத்தில் படம் வெவ்வேறு லெவலில் உள்ளது என்று ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், வித்யூ ஜமால், பிஜு மேனன் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக பாராட்டப்படுகிறது. குறிப்பாக வித்யூ ஜமால் படத்தின் இரண்டாம் பாதியில் வில்லனாக வெற்றிகரமாக காட்சியளித்துள்ளார்.
அனிருத் இசையமைத்த பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்றபடி சுதீப் எலமோனின் ஒளிப்பதிவும் பாராட்டப்பட்டுள்ளது.
ரசிகர்கள் கூறுவதப்படி, மதராஸி படம் ரூ.300 – 350 கோடி வரையிலான பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டும் வாய்ப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது. அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தனது மார்க்கெட்டையும், ஏ.ஆர். முருகதாஸ் தனது கம்பேக்கையும் நிரூபித்துள்ளனர்.
மொத்தத்தில், மதராஸி படம் பாராட்டு மழையிலும், வசூல் மழையிலும் மூழ்கி, இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாகும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.