சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடைசியாக தன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இந்தப் படம் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதே ஆண்டில் திரைக்கு வருவதற்கான எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால் பல காரணங்களால் படம் ரிலீசாகவில்லை.

இந்த திரைப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ‘மதகஜராஜா’ திரைப்படம் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்தது. விஜய் ஆண்டனி இசையமைத்த இந்த படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்தார். ஆர்யா கெஸ்ட் ரோலிலும், சதா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
பல சிக்கல்களின் காரணமாக ‘மதகஜராஜா’ கடந்த 12 வருடங்களில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது, படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.