சென்னை: சமீபத்தில் அதிகம் பேசப்பட்டவர் மாதம்பட்டி ரங்கராஜ். முதல் மனைவியுடன் வாழ்ந்துகொண்டிருந்த போதே, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டதால், அவரைச் சுற்றி சர்ச்சைகள் குவிந்தன. இதேசமயம், கார் பிரியராகிய அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன என்பது இணையத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

மாதம்பட்டி ரங்கராஜ் முதன்முதலில் மெஹந்தி சர்கஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் போன்ற படங்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியின் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டு வருகிறார்.
ஜாய் கிரிஸில்டா, “எனக்கு ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் தான் என் கணவர். சென்னையில் உள்ள கோவிலில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்” என பதிவிட்டதை அடுத்து, அவர் மீது ஏமாற்றி திருமணம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் சமூக ஊடகங்களில் அவரை பற்றிய விவாதங்கள் அதிகரித்தன.
ஆனால் சர்ச்சையைக் கடந்து, கார் மீது கொண்ட பற்று இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. சிறுவயது முதலே கார்களில் ஆர்வம் கொண்டிருந்த ரங்கராஜ், தனது முதல் காராக டாடா இண்டிகாவை வாங்கியதாக தெரிவித்துள்ளார். தற்போது அவர் Ford Endeavour (4 cars), Jaguar XF, BMW X3, Volvo V40, Mercedes-Benz CLA, Porsche Macan போன்ற விலை உயர்ந்த கார்கள் வைத்துள்ளார். சமீபத்தில் Range Rover Autobiography காரையும் வாங்கியுள்ளார். இதன் ஆரம்ப விலை மட்டுமே ₹3.65 கோடி.
சமூக ஊடகங்களில் ஒருபுறம் சர்ச்சை, மறுபுறம் கார் கலெக்ஷன் என மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளார்.