சென்னை : காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள மெட்ராஸ் மேட்னி படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள மெட்ராஸ் மேட்னி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.
இந்தப் படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷிணி ஹரிப்பிரியன், விஷ்வா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்குகிறது. ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவில், கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், மெட்ராஸ் மேட்னி திரைப்படம் திரையரங்குகளில் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.