நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த 50வது திரைப்படமான மகாராஜா ஓடிடியில் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்து, பான் இந்தியா அளவில் ஒரு முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். 2010-ம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த “தென்மேற்கு பருவக்காற்று” படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான விஜய், தற்போது 50 படங்களில் நடித்துள்ளார்.
மகாராஜா திரைப்படத்தில் அனுராக் கஷ்யப், நட்டி நட்ராஜ், அபிராமி மற்றும் மம்தா மோஹந்தாஸ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், ரூ.110 கோடி வசூலித்தது.
இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் ரூ.17 கோடிக்கு வாங்கியது, ஆனால் உலகளவில் 2 கோடியேற்கும் அதிகமானோர் இதனை பார்த்து, சுமார் 150 கோடி லாபம் சம்பாதித்துள்ளார்கள்.
மகாராஜா திரைப்படம், விஜய் சேதுபதியின் கேரியரில் ஹீரோவாக ரூ.100 கோடி வசூலித்த முதல் படம் ஆகும். இது தியேட்டர் மட்டுமின்றி ஓடிடி தரப்பிலும் மாஸான சாதனை நிகழ்த்தியுள்ளது.
வெளிநாடுகளில் மகாராஜா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, மேலும் இதற்கான விமர்சனங்கள் பரவலாக பகிரப்பட்டுள்ளது.