ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்து ரூ.5.90 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு நடிகர் மகேஷ்பாபு ஆஜராக மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு, சூரானா குழுமம் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்காக விளம்பரங்களில் நடித்திருந்தார். அந்த நிறுவனங்கள் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததாக சமீபத்தில் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், மகேஷ்பாபுவிடம் கூடுதல் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது.

மகேஷ்பாபு இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் திரைப்பட படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் ஆஜராக இயலாது எனவும், விசாரணையை மற்றோரு தேதிக்கு மாற்றும்படி அவர் தரப்பில் அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தெலுங்கு திரையுலகத்திலும், தொழில்முறை ஒழுங்குமுறை தொடர்பான விவாதங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.