சென்னை :நடிகர் சூரி நடித்துள்ள மாமன் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் வீடியோ வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று முடிந்தது. இப்படம் வருகிற மே 16 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.