மோகன்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரோஸ்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில் அவருக்கு மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “தனது நடிப்புத் திறமையால் நம்மைக் கவர்ந்த மோகன்லால், ‘பரோஸ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
அவருடைய அபார அனுபவமும் ஞானமும் இந்தப் படத்துக்குப் பலன் தரும் என்று நம்புகிறேன். என் அன்புக்குரிய மோகன்லால் வெற்றியடைய பிரார்த்திக்கிறேன்,” என்றார். ‘பரோஸ்’ திரைப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. அதை விளம்பரப்படுத்த மோகன்லால் தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு பயணம் செய்தார்.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற, லிடியன் நாதஸ்வரம் இசையமைத்துள்ளார்.