மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படத்தில் மம்முட்டி, மோகன்லால் மற்றும் பிற பிரபலங்கள் நடித்து வந்தனர். இந்த படம் மலையாள திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். சமீபத்தில், மம்முட்டியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது அவர் குணமடைந்துவிட்டதால், படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படக்குழு படத்திற்கு ‘பேட்ரியாட்’ என்று பெயரிட்டுள்ளது.

மேலும், ஒரு சிறிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஃபஹத் ஃபாசில், குஞ்சாகோ போபன், நயன்தாரா, ரேவதி மற்றும் பலர் மம்முட்டி – மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளனர்.
இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என்பதை டீசர் வெளிப்படுத்துகிறது. இந்த படத்தை ஆண்டோ ஜோசப் மற்றும் கே.ஜி. அனில் குமார் இணைந்து தயாரிக்கின்றனர். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவாளர், சுஷின் ஷ்யாம் இசையமைப்பாளர். வெளியீட்டு தேதியை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.