திருவனந்தபுரம்: 2008-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘டுவென்டி:20’ படத்தில் மம்முட்டியும் மோகன்லாலும் இணைந்து நடித்தனர். இதையடுத்து தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இந்த படத்திற்காக மம்முட்டி 100 நாட்களும், மோகன்லால் 30 நாட்களும் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் குஞ்சாக்கோ போபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் மம்முட்டி, மோகன்லால், குஞ்சாக்கோ போபன் ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மோகன்லால் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிக்கிறார்.
மேலும், பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘மெகாஸ்டார் 429’ என்று பெயரிடப்பட்டுள்ளது.