‘மார்கோ’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மலையாளத்தில் வெளியான ‘மார்கோ’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிட்ட படக்குழுவினர். படத்தின் உலகளாவிய வசூலும் ரூ. 100 கோடியை கடந்துவிட்டது.
ரூ.30 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படம் வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை ஈட்டியுள்ளது. மலையாளத்தில் வெளியான ‘ஏ’ சான்றிதழ் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை ‘மார்கோ’ தற்போது படைத்துள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
படத்தை பார்த்த இந்திய திரையுலகினர் பலரும் உன்னி முகுந்தனுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். ‘மார்கோ’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை ஹனிப் ஆதினி இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.