தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக செல்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷனில், மாரி செல்வராஜ் தன் மகளின் ஆசையைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.
ஒருநாள் அவர் வீட்டில் தன் பிள்ளைகளுடன் பைசன் படத்தில் இடம்பெற்ற தீக்கொளுத்தி பாடலை பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினார். அப்பாடல் பார்க்கும்போது அவரது மகள், “ஏன் மாமா சிரிக்கவே மாட்டாரு, சிரிக்காமயே ஆடுறாரு?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பின்னர் மகள், “உன் படம் பார்த்தால் எனக்கு சிரிப்பு வரல; நீ சிரிக்கிற மாதிரி ஒரு படம் எடுப்பா?” என கேட்டார். இந்தச் சம்பவம் மாரி செல்வராஜுக்கு ஒரு புதிய படத்தை உருவாக்கும் யோசனையைத் தந்ததாக அவர் தெரிவித்தார்.

மாரி செல்வராஜ் இதை சிந்தித்து, ஜானர் மாற்றி ஒரு ஜாலியான பீல் குட் படத்தை எடுக்க முடியும் என்று முடிவு செய்தார். இதன் மூலம் அவர் தனது படங்களில் ஒரு வித்யாசத்தை கொண்டுவர முடியும் என்றும், மகளின் ஆசை ரசிகர்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாரி செல்வராஜின் படங்கள் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் என தொடர்ந்து வெற்றிகரமாக வருவதால், அவரின் இயக்குனர் பயணம் மிகவும் சிறப்பாகும். எதிர்காலத்தில், மாரி செல்வராஜ் மகளின் கோரிக்கையையும், ரசிகர்களின் கோரிக்கையையும் கருத்தில் கொண்டு புதிய பீல் குட் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.