சென்னை: ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு, பஹத் ஃபாசில், வடிவேலு மீண்டும் இணைந்துள்ள படம் ‘மாரீசன்’. சுதீஷ் ஷங்கர் இயக்குகிறார். விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதாநாயகி இல்லை என்று கூறப்படுகிறது.
வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்துள்ளார், மகேந்திரன் மேடை அமைத்துள்ளார்.

டிராவலிங் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். ஜூலை மாதம் வெளியாகும் இப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 98-வது படமாகும்.