கர்நாடகா: பிரபல வில்லன் நடிகர் தனஞ்செயாவுக்கு திருமணம் நடந்தது. இதில் கன்னட திரையுலகத்தினர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
புஷ்பா (ஜாலி ரெட்டி), பாயும் ஒளி நீ எனக்கு, மழை பிடிக்காத மனிதன் படங்களில் வில்லனாக நடித்தவர் கன்னட நடிகர் தனஞ்செயா. அவருக்கும், சித்ரதுர்காவை சேர்ந்த டாக்டர் தான்யதாவுக்கும் மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் வைத்து லிங்காயத் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இதில் சிவராஜ்குமார், துருவ சார்ஜா உள்ளிட்ட கன்னட திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.