நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து குறித்து தெலங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா கூறிய கருத்து தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், தெலுங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, தெலுங்கு திரை உலக நடிகைகளை முன்னாள் முதல்வர் சந்திரசேகர வாவின் மகன் கேடிஆர் மிரட்டியுள்ளார்.
நடிகைகளை போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்கும் அவர் தான் நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்திற்கு காரணம்.
அந்த வகையில், “நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்துக்கு கே.டி.ஆர் தான் காரணம்” என்ற கருத்து திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், “நாகார்ஜுனாவின் மகன் குடும்பத்தை பிளவுபடுத்துவதில் ஈடுபட்டுள்ளார்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த கருத்துகளால் நாக சைதன்யா கடும் ஏமாற்றம் அடைந்துள்ளார். தனது X தளத்தில், “உங்கள் தனிப்பட்ட எதிரிகளை விமர்சிக்க பிரபலங்களின் வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள். மற்றவர்களின் அந்தரங்கத்தை மதிக்கவும்” என்று கடுமையான கண்டனத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “அமைச்சர் என்ற நிலையில் நீங்கள் இப்படி பேசுவது தவறு” என்றார். இது நாக சைதன்யா குடும்பத்திற்கு முற்றிலும் பொருத்தமற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் இந்த காரணங்களுக்காக விமர்சனங்களும், கடுமையான கருத்துகளும் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன கேள்வி வந்தாலும் குடும்பத்தை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும் என நாக சைதன்யா கூறியுள்ளார்.