மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி – சாய்பாய் தம்பதியின் மூத்த மகன் சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ‘ஜாவா’ என்ற இந்தி படம் உருவாகியுள்ளது. சாம்பாஜி மகாராஜாவின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் விக்கி கவுஷல் சாம்பாஜி மகாராஜாவாகவும், ராஷ்மிகா மந்தனா அவரது மனைவியாகவும், அக்ஷய் கண்ணா ஔரங்கசீப்பாகவும் நடித்துள்ளனர்.
லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 14-ம் தேதி வெளியான இப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது. கடந்த 7 நாட்களில் இப்படம் ரூ. 270 கோடியை வசூலித்துள்ளது. இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்தார். இதையடுத்து கோவா மாநிலத்திலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.