கேரள திரையுலகில் பாலியல் தொந்தரவுகள் பற்றிய தகவல்கள் பரவலாகி, தற்போது மோலிவுட் நடிகைகள் பலரும் தங்களை நேரடியாக பாதித்த சம்பவங்களை வெளிப்படையாக கூறி வருகிறார்கள். இந்த புகார்களை பரிசீலிக்கும் வகையில் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும் அந்த கமிட்டியின் அறிக்கையும் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதலில் இந்த விஷயத்தில் தைரியமாக வெளியே வந்தவர் நடிகை ரேவதி சம்பத். 2016ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் சித்திக் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பிரபல தமிழ் நடிகர் ரியாஸ் கான் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைத்தார்.
மேலும் நடிகை ஸ்ரீலேகா மித்ரா, இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நடிகை சோனியா மல்ஹார், 2013ம் ஆண்டு ஒரு பிரபல நடிகர் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார். இது போன்ற பல புகார்கள், நடிகைகள் ஸ்ரீதேவிகா, கீதா விஜயன், மீனு முனீர் மற்றும் பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
கேரள திரையுலகில் 18 பேர் மீது பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. AMMA சங்கத்தின் 17 உறுப்பினர்கள் பதவி விலகியுள்ள நிலையில், இந்த விசாரணையின் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.