லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் ‘கூலி’ நாளை வெளியாகிறது. இதில் சத்யராஜ், அமீர் கான், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சௌபின் சாஹிர், உபேந்திரா மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
அவரது இசையில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா…’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பூஜா ஹெக்டே இதில் ஆடியுள்ளார். இந்தப் பாடல் வைரலானதால், பல ரசிகர்கள் அந்தப் பாடலை பிரபல ஹாலிவுட் நடிகை மோனிகா பெலூசிக்கு அனுப்பினர். இந்தப் பாடல் மோனிகா பெலுசியின் தோழி மெலிடா மூலம் அவருக்குச் சென்றது.

அதைக் கேட்ட மோனிகா, இந்தப் பாடலை மிகவும் ரசித்ததாகக் கூறினார். நெகிழ்ச்சியடைந்த நடிகை பூஜா ஹெக்டே, “மோனிகா பெலூசியின் வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிக முக்கியமான பாராட்டுகள்.
எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவரிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.