சென்னை: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாகியுள்ளார். சாதாரண நபர் வெற்றியாளராக மாறி உள்ளதை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழில் இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த முறை புது வரவாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தொடங்கியது.
24 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் பைனலுக்கு முத்துக்குமரன், விஷால், சௌந்தர்யா, பவித்ரா மற்றும் ரயான் ஆகிய ஐவர் தகுதி பெற்றனர்.
இறுதி நாளில் விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா ஆகிய 3 போட்டியாளர்கள் இருந்தனர். 3வது இடத்தை விஷால் பிடித்துள்ளார்.
முடிவில் யார் வெற்றியாளர் என்ற அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி, முத்துக்குமரின் கையை தூக்க முதல் இடத்தைப் பிடித்து வெற்றிக்கோப்பையை தட்டித்தூக்கினார். இரண்டாம் இடத்தை சௌந்தர்யா பிடித்தார்.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கோப்பையுடன் ரூ.40 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.