சென்னை : சென்னையில் நடிகர் கவுண்டமணி தான் கதை நாயகனாக நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் செம கலகலப்பாக பேசினார். இந்த படத்தை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள் என்றார்.
‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய படத்தின் நாயகன் கவுண்டமணி, “கேமரா மேன் காத்தவராயன், வெளிச்சமாக தெரியும் வகையில் படம் எடுத்து இருக்கிறார்.
குடும்பத்தோடு வந்து இப்படத்தை பார்த்து வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள்” என அவர் பாணியில் கலகலப்புடன் பேசினார். நீண்ட நாளுக்கு பின் இவரின் கலகலப்பு பேச்சை ரசிகர்கள் விசில் அடித்து ரசித்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கவுண்டமணி கதை நாயகனாக நடித்துள்ள படம் வெளியாக உள்ளது ரசிகர்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.