மலையாள நடிகை நிமிஷா சஜயன் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மிஷன்: அத்தியாயம் 1 போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். நெட்ஃபிக்ஸ் ஓடிடி பிளாட்ஃபார்மில் வெளியான ‘டப்பா கார்டல்’ என்ற வெப் தொடரில் மாலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் ஷபானா ஆஷ்மி, ஜோதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதில் நடிப்பது பற்றி நிமிஷா சஜயன் கூறும்போது, “இந்த வாய்ப்பு வந்தபோது நான் மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை. 5 பெண்களைப் பற்றிய சக்திவாய்ந்த கதை இது. என்னுடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருந்தது. ஷபானா ஆஷ்மியுடன் நடிக்க வேண்டும் என்பது கனவு போல இருந்தது. இந்தத் தொடரில் எனக்கு அது நடந்தது. என் முன் அவள் நடிப்பதைப் பார்த்ததும் ஒரு மாயாஜாலம் போல் தோன்றியது. எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருடன் நடித்தது மறக்க முடியாதது,” என்றார்.