By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    எங்கள் மகனின் மருத்துவச் செலவுகளுக்கு உதவுங்கள்… சார்ஜாவிலிருந்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை
    2 Min Read
    கடும் விளைவுகளை எலான் மஸ்க் சந்திப்பார்… அதிபர் டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை
    2 Min Read
    வரும் 11ம் தேதி இம்ரான்கான் ஜாமீனில் விடுதலை… பிடிஐ கட்சி மூத்த தலைவர் தகவல்
    1 Min Read
    கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… கட்டிடங்கள் குலுங்கின
    0 Min Read
    அதிபர் ட்ரம்புடன் வலுத்த மோதல் : புதிய கட்சி ஆரம்பித்தார் எலான் மஸ்க்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியா மோடியின் ஆட்சியில் சீரழிந்துவிட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!
    1 Min Read
    2 ஆண்டுகளில் இந்திய சாலைகள் அமெரிக்காவைப் போல இருக்கும்: நிதின் கட்கரி
    2 Min Read
    ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் விரைவில்: எல். முருகன் தகவல்
    2 Min Read
    ராகுல் காந்தி மக்களின் தீர்ப்பை ஏற்க மறுப்பது அவமதிக்கும் செயல்: மகாராஷ்டிரா முதல்வர் கருத்து
    1 Min Read
    உ.பி.யில் 25 வாகன டீலர்களின் உரிமங்கள் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பு..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஏலகிரி மலைக்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!!
    1 Min Read
    கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?
    0 Min Read
    நீலகிரி, கோவையில் ஜூன் 13, 14, 15 அன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
    2 Min Read
    விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள்..!!
    1 Min Read
    மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடைகிறது
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: என் சம்பளம் ஏறாது… நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > என் சம்பளம் ஏறாது… நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சி
சினிமா

என் சம்பளம் ஏறாது… நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சி

Nagaraj
Last updated: May 14, 2025 5:41 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: டூரிஸ்ட் பேமிலி படம் வெற்றி அடைந்ததால் என்னுடைய சம்பளத்தை ஏற்றிவிடுவீர்களா என்று பலரும் கேட்கிறார்கள்.சம்பளம் ஏறாது. அதே சம்பளம்தான் என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

‘அயோத்தி, கருடன், நந்தன்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை அடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் பேமலி’. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர்.

அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது. இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பேசிய சசிகுமார், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படம் வெற்றி அடைந்ததால் என்னுடைய சம்பளத்தை ஏற்றிவிடுவீர்களா என்று பலரும் கேட்கிறார்கள்.

சம்பளம் ஏறாது. அதே சம்பளம்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. இதை என்னுடைய வெற்றியாக நான் நினைக்கவில்லை. சசிகுமார் ஜெயித்து விட்டார், தயாரிப்பு நிறுவனம் ஜெயித்து விட்டது என்று நினைக்காதீர்கள். புது இயக்குநர்களுக்கும், தோல்வி அடைந்த இயக்குநர்களுக்கும் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது இந்தப் படம்.

என்னுடைய ஒரு படம் மொத்தமாகவே இரண்டரைக் கோடிதான் வசூல் செய்தது. ஆக என்னுடைய ஒரு படம் இரண்டரைக் கோடிக்கும் ஓடி இருக்கிறது. நான் நடித்த படங்களில் ‘சுந்தர பாண்டியனும்’, ‘குட்டிப்புலியும்’தான் அதிக வசூல் செய்த படங்கள். இந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் அதனை முறியடித்திருக்கிறது. அதனால் இனி வருபவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுங்கள்.

நல்ல படம் கொடுத்தால் குடும்பத்துடன் தியேட்டருக்கு மக்கள் வருவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். ‘டூரிஸ்ட் பேமிலி’ எங்கள் வெற்றி அல்ல. இது தமிழ் சினிமாவின் வெற்றி என்று நான் கருதுகிறேன். இன்னும் பல குடும்பப் படங்கள் வர வேண்டும்” என்று கூறினார்.

You Might Also Like

விவாகரத்து பெற்று 4 வருடங்கள் கழித்து டாட்டூவை நீக்கிய சமந்தா..!!

‘லவ் மேரேஜ்’ ஜூன் 27-ம் தேதி வெளியாகிறது

விஜய்யின் அதிரடி முடிவு: ‘ஜனநாயகன்’ படத்தின் விநியோக உரிமை..!!

அஞ்சலி நாயர், சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘மெஜந்தா’..!!

ஹீரோவாக நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக மாறும் ரவி மோகன்..!!

TAGGED:Actor SasikumarCharacterDharmadasFamily filmstourist familyகதாபாத்திரம்குடும்பப்படங்கள்டூரிஸ்ட் பேமிலிதர்மதாஸ்நடிகர் சசிகுமார்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

விவாகரத்து பெற்று 4 வருடங்கள் கழித்து டாட்டூவை நீக்கிய சமந்தா..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?