மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார். தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியரான இவர், 2016-ம் ஆண்டு தனது 41 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், அவரது ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூலை 5-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்படும்.

அவரது பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்கள் மற்றும் பின்னணி பாடகர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். வெல்பர் கோர் குழுவுடன் இணைந்து ஏசிடிசி இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது.