‘நித்தம் ஒரு வானம்’ என்பது அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த படம். 2022-ல் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை ரா. கார்த்திக் இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து, அவர் இயக்கும் படத்தில் நாகார்ஜுனா ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதை அவர் தனது அன்னபூர்ணா ஸ்டுடியோவின் கீழ் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்படும் இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் நடிகர் நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தனுஷின் ‘குபேரா’ படத்திலும் நடித்துள்ளார்.