சென்னை: 2012-ம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘இதற்குத்தான் ஆசைப்பட்டை பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘எதிர் நீச்சல்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, தமிழ் மொழி படங்களைத் தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க நந்திதா ஆர்வம் காட்டுகிறார். ஆனால் எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லை.

சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா ஸ்வேதா, ஹோம்லி வேடங்களில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில், சமீபத்தில் தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் விழாவிற்காக ஒரு பாரில் நண்பர்களுடன் குடிபோதையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதில், அவர் அரைகுறை ஆடையில் இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
“இந்த குடும்பப் பாங்கான நடிகைக்கு என்ன ஆச்சு? நடிக்க வாய்ப்பு கிடைக்காததால இப்படி ஆகிவிட்டாரா? அவரிடமிருந்து இப்படி ஒரு மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை” என்று நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.