ஐதராபாத்: தெலுங்கில் நானி நடித்த ‘அந்தே சுந்தராணிகி’ படத்தை இயக்கியவர் விவேக் ஆத்ரேயா. இவர் இயக்கிய படம் ‘சரிபோதா சனிவாரம்’.
இப்படத்திற்கு தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த டிவிவி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், முரளி சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரசிகர்களுக்கான ‘மாஸ்’ படமாக உருவாகியுள்ள இப்படம் (ஆகஸ்ட் 29) திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
90 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.