
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நானி. தெலுங்கு திரைப்படத் துறையில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் காணப்படும் நிலையில், எந்த பின்புலமும் இல்லாமல் தானாகவே முன்னேறி வெற்றி பெற்றவர் அவர். நானி நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட்டாகி வருகின்றன.

அந்த வரிசையில், நானி நடித்த ‘ஹிட் 3’ திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. டிரைலரில் காணப்பட்ட அதிகப்படியான வன்முறைக் காட்சிகள் விமர்சனங்களை உருவாக்கிய நிலையில், இயக்குநர் சைலேஷ், இந்த படம் பதினெட்டு வயதுக்குக் கீழுள்ளவர்கள் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கை தெரிவித்திருந்தார்.
படம் வெளியாகியதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியீட்டின் முதல் நாளில், தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டும் சுமார் 17 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, ஹிட் திரைப்படத் தொடர்களில் நான்காவது பாகத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.