ஹைதராபாத்: தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்க ரூ.18 கோடி சம்பளம் கேட்டுள்ளார் நயன்தாரா. நயன்தாரா ஒரு படத்திற்கு 10 கோடி முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். இப்படத்தை சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா கொனிடேலா மற்றும் சாஹு கரபதி இணைந்து தயாரிக்கின்றனர்.

இதில் நடிக்க நயன்தாராவிடம் பேசினார்கள். அப்போது ரூ.18 கோடி சம்பளம் கொடுத்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட தயாரிப்பாளர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நயன்தாரா இதற்கு முன் சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ மற்றும் ‘காட்பாதர்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அந்த நட்பின் காரணமாகத்தான் சிரஞ்சீவி தரப்பு நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டது. ஆனால் அவர் அதிக சம்பளம் கேட்பதால் அவருக்கு பதிலாக வேறு கதாநாயகியை அணுக தயாரிப்பு தரப்பு ஆலோசித்து வருகிறது.