சென்னை: நயன்தாராவோட நிஜமான குணம் இது தான் என்று இயக்குனர் நந்து தெரிவித்துள்ள தகவல்கள் கோலிவுட்டை கலக்கி வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர், நயன்தாரா. தற்போது இவர் ராக்காயி என்ற மிரட்டல் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பதை தாண்டி தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. தொடர்ந்து நயன்தாரா குறித்து பல சர்ச்சைகள் உலா வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நயன்தாராவின் குணம் குறித்து கெட்டவன் படத்தின் இயக்குனர் நந்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ” நாம் சினிமாவில் பார்க்கும் நயன்தாரா வேறு, நிஜ வாழ்க்கையில் பார்க்கும் நயன்தாரா வேறு.
படத்தில் பார்ப்பது போன்று அவரிடம் எந்த ஒரு திமிரும் இருக்காது. அனைவரிடமும் சகஜமாகவும், அன்பாகவும் பழகுவார். அவருடைய கைகளால் சமைத்து கொடுப்பார்.
ஒரு மேன்லி ஆட்டிட்யூட் நயன்தாராவிடம் எப்போதும் காணப்படும். ஆனால், மற்றவர்கள் அவரை குறித்து குறை சொல்லும் விஷயங்கள் அனைத்தும் பொய்யானது” என்று கூறியுள்ளார்.