வாணி போஜன், ஒரு விமானப் பணிப்பெண்ணாக தன் பயணத்தைத் தொடங்கி, மாடலிங் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர். சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வ மகள்’ சீரியல் மூலம் குடும்பவாசிகளின் இதயத்தில் இடம்பிடித்து, ரசிகர்களால் “சின்னத்திரை நயன்தாரா” என அழைக்கப்பட்டார்.

இந்நிலையில், வெள்ளித்திரையிலும் குத்துவிளக்கேற்றிய வாணி, ‘ஓ மை கடவுளே’ படத்தில் அசோக் செல்வனின் ஜோடியாக நடித்து முதன்முதலாக சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன் பின்பு ‘மகான்’, ‘மிரள்’, ‘லவ்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அவர், சமீபத்தில் சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பாரம்பரியமாகவும் அழகாகவும் தோன்றும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வெகுவாக வரவேற்பைப் பெற்றுள்ளன. அவரது இந்த சேலைலுக் தற்போதைய வைரல் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.