இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கவனம் ஈர்த்த படம் “ஒருநாள் கூத்து” அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் ஆகியோருடன் உருவாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் பின் அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “ஃபர்ஹானா” திரைப்படத்தை இயக்கினார்.

அந்த படம் விமர்சகர்களிடையே பாராட்டுக் கிடைத்தாலும், வசூலில் பெரும் சாதனை இல்லாமல் இருந்தது. இப்போது அதர்வா நடித்துள்ள “DNA” படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் உள்ளது. ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அம்பேத் குமார் தயாரிப்பாளராக உள்ளார்.
நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் பணி செய்துள்ளனர். காந்த் ஹரிஹரன், சத்ய பிரகாஷ், அனல் ஆகாஷ், பிரவீண் சைவி, சஹி சிவா ஆகிய புதுமுக இசையமைப்பாளர்கள் இசை வழங்கியுள்ளனர்.
படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ஆம் தேதி இந்த படம் வெளிவர உள்ளது. அதே நாளில் தனுஷ் நடிக்கும் “குபேரா” திரைப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த இரு படங்களும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.