நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தை இரா.சரவணனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எம்.குரு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தில் பரத், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.
அவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி, ஜோ மல்லூரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எஸ்.ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். ஜம்பரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தர்மராஜ் வேலுச்சாமி தயாரிக்கிறார். விஜயகுமார் இணைந்து தயாரிக்கிறார். குடும்ப உறவுகளின் வலிமையை உணர்த்தும் இந்த பிரபலமான படத்தின் படப்பிடிப்பு மார்ச் 10-ம் தேதி பட்டுக்கோட்டையில் தொடங்குகிறது. ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்.