சிறுத்தை வேகத்தில் வளர்ந்த பிரபலமாக நடிகை பிரியா பவானி சங்கர், செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கி, சின்னத்திரை தொடர்கள் வழியாக ரசிகர்களின் மனதை வென்றவர். பின்னர் மேயாத மான் படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான அவர், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார்.

சினிமாவில் மட்டுமின்றி இப்போது ஹோட்டல் தொழிலில் கூட கால் பதித்துள்ளார். தொழில் துறைக்கும் தனது நடிப்புத் திறமையைப் போலவே ஆர்வமாக ஈடுபடுகிறார். இது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர், இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றன.
அண்மையில் அவர் பகிர்ந்திருக்கும் சில புதிய லுக் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவரது சிரிப்பும், எளிமையான அணிகலன்களும், அவரின் இயற்கையான அழகையும் பேஷன் சென்ஸையும் இன்னுமொரு கட்டத்திற்கு உயர்த்தியிருக்கின்றன.