நயன்தாரா தற்போது பொள்ளாச்சியில் நடைபெறும் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் இந்தப் படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதற்கிடையே, படத்தில் இணையும் புதிய நடிகர்கள் மற்றும் கதையின் தகவல்கள் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

முதல் பாகத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி, நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்போது இரண்டாம் பாகத்தில், சுந்தர்.சி இயக்குவதுடன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ரெஜினா கசாண்ட்ரா வில்லியாக நடிப்பதுடன், மகாராஜா படத்தில் வில்லனாக மிரட்டிய சிங்கம்புலி மற்றும் விச்சு விஸ்வநாத் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர். இளம் நடிகை லலிதா, சுந்தர்.சி உள்ளிட்டோருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
நயன்தாரா நடித்த மாயா, அறம், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாக மாறியுள்ளன. தற்போது உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 100 கோடி ரூபாயை மிஞ்சும் பட்ஜெட்டில் தயாராகிறது என்பது இந்தப் படத்தின் பெருமையை எடுத்துக்காட்டுகிறது. இது ஹீரோயினை மையமாகக் கொண்டு உருவாகும் மிகப்பெரிய படங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது.
படத்தின் சில பகுதிகள் பீரியட் டிராமாவாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் படத்திற்கு தேவையான கிராபிக்ஸ் மற்றும் பிணையங்கள் தரமான முறையில் எடுக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ளது.
முன்னதாக தமன்னாவுடன் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 4 100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், இப்போது நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் 2 உருவாகி வருவது மேலும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.