ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறன. இதுவரை பல பிரபல நடிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன் மற்றும் பியர்ஸ் பிரோஸ்னன் போன்றவர்கள் இதில் உள்ளனர். சமீபத்தில் 25வது ஜேம்ஸ் பாண்ட் படம் “நோ டைம் டு டை” டேனியல் கிரைக் நடிப்பில் வெளிவந்தது.

இந்த படத்துடன் தான் டேனியல் கிரைக் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் கடைசியாக நடிக்கப்போகிறார் என்று அறிவித்தார். அடுத்து யார் ஜேம்ஸ் பாண்ட் ஆக இருப்பார் என்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு புதிய ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு தேர்வாகும் பட்டியலில் டாம் ஹாலண்ட், ஜேக்கப் எலோர்டி மற்றும் ஹாரிஸ் டிக்கின்சன் ஆகிய இளம் நடிகர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ‘பாண்ட் கேர்ள்’ யார் என்ற விவாதமும் சூடாக இருந்து வருகிறது. ஹாலிவுட்டில் சமீபத்தில் பிரபலமான சிட்னி ஸ்வீனி ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகியாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அடுத்த படத்தை டூன் பட இயக்குனர் டென்னிஸ் வில்லுவன் இயக்கப்போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம் மிகுந்த எதிர்ப்பார்ப்போடும் ஆர்வத்தோடும் எதிர்பார்க்கப்படுகிறது.